சோழ தேசத்து வேங்கை வந்தாச்சு! 5 மொழிகளில் டப்பிங்கி பேசி அசத்திய சியான் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் ரோலில் விக்ரம், இந்நிலையில் இன்று, எங்கள் சோழ தேசத்து வேங்கையின் கர்ஜனை...5 மொழிகளில் என்ற கேப்ஷனுடன் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்காக 5 மொழிகளில் விக்ரம் டப்பிங் பேசிய வீடியோ மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு வரி தமிழில், அடுத்த வரி தெலுங்கில் என விக்ரமின் டப்பிங் வீடியோ, புலியை போல் உருமுவது ஆகியன ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட பொன்னியின் செல்வன் டீசரின் இறுதியில், விக்ரம் பேசும் ஒரே ஒரு டயலாக் மட்டும் இடம்பெற்றிருக்கும். இந்த கல், ரத்தம், போர், பகை எல்லாமே அதை மறக்கத்தான். அவளை மறக்கத்தான், என்னை மறக்கத்தான் என பேசி கத்துவார். இந்த டயலாக் டப்பிங் பேசும் வீடியோ தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.