Posts

Showing posts with the label #CMStalin | #DMK | #TamilNadu

நெல்லை கல்குவாரி விபத்து...காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்!

Image
நெல்லை கல்குவாரி விபத்து...காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்! அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு, துரிதப்படுத்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு செல்ல அமைச்சர்களை அறிவுறுத்தியுள்ளார். ஸ்மார்ட் ஹோம்ஸ் - போரூர் அருகில், சென்னை @ ரூ.61 லட்சம்* முதல் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை கிராமம், அடைமிதிப்பான்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் முருகன், விஜய், செல்வம், முருகன், ராஜேந்திரன், செல்வகுமார் ஆகிய ஆறு பேர் சிக்கியுள்ளனர். அதில் இருவர் முருகன் மற்றும் விஜய் ஆகியோர் மீட்கப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவ்விபத்தில் சிக்கியுள்ள செல்வம், முருகன், செல்வகுமார் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரை மீட்கும் முயற்சியில் தீயணை...