அடுத்த 3 மாதத்திற்கு ரேஷன் பொருட்கள் இலவசம்! மாநில அரசு அறிவிப்பு!!261784189
அடுத்த 3 மாதத்திற்கு ரேஷன் பொருட்கள் இலவசம்! மாநில அரசு அறிவிப்பு!! உத்தரப்பிரதேசத்தில், அந்தியோதயா திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த கார்டுதாரர்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு அனைத்து ரேஷன் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அரசு அறிவிப்பு: மத்திய அரசு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மக்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. அந்த வகையில், உத்திர பிரதேச மாநிலத்தில் அந்தியோதயா யோஜனா என்ற திட்டத்தின் கீழ், ஏழை மக்களுக்கு 35 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாநிலத்தில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்த யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நாளையுடன் தனது கட்சி அமைக்கப்பட்ட 100வது நாளை கொண்டாடுகிறது. இதனை சிறப்பிக்கும் பொருட்டு மாநிலத்தில் உள்ள, அனைத்து அந்தோதியா கார்டுதாரர்களுக்கு வருகிற செப்டம்பர் 30 வரை அதாவது தொடர்ந்து மூன்று மாதத்திற்கு அனைத்து ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 15 கோடிக்கும் மேலான மக்கள் இலவச கோதுமை, அரிசி, சர்க்கரை என ரேஷன் பொருட்களை பெற்று