Posts

Showing posts with the label # | #Bull | #A | #Reg

கழுதைகளுக்கு திருமணம்.. சிறிது நேரத்தில் மழை.. மகிழ்ச்சியில் மக்கள்..!739349582

Image
கழுதைகளுக்கு திருமணம்.. சிறிது நேரத்தில் மழை.. மகிழ்ச்சியில் மக்கள்..! விஜயநகர் மாவட்டத்தில் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த சிறிது நேரத்தில் மழை பெய்த சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு வடகர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி, பெய்து வருகிறது. ஆனால் விஜயநகர் மாவட்டத்தில் இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் மழை வேண்டி அரப்பனஹள்ளி தாலுகா கோனகேரி கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று 2 கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். அந்த கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து கழுதைகளுக்கு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 2 கழுதைகளுக்கும் மாலை அணியப்பட்டு இருந்தது. மஞ்சள், குங்குமம் வைக்கப்பட்டது. புத்தாடை அணியப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் கழுதைகளை கிராம மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது திடீரென கிராமத்தில் மழை பெய்தது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.