Posts

Showing posts with the label #Motorists | #Suffering | #Sudden | #Sugarcane

பல்லாவரம் ரேடியல் சாலையில் திடீரென சூழ்ந்த கரும்புகையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!1323917289

Image
பல்லாவரம் ரேடியல் சாலையில் திடீரென சூழ்ந்த கரும்புகையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி! சென்னை: பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் இருபுறமும் பெரிய ஏரி அமைந்துள்ளது. அங்கு குப்பைகளும் கொட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 200 அடி சாலையில் இரண்டு ஏரிகளை இணைக்கும் பாலத்தின்கீழ் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகைகள் சூழ்ந்தன. தீப்பற்றி ஏரிந்து, வெளியேறும் கரும்புகையால் அரை மணி நேரத்திற்கும் மேலாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் பாலத்திற்கு அடியில் இருந்து லேசான வெடி சத்தம் கேட்டதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து தாம்பரம் தீயணைப்புத்துறையினருக்கு வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பல்லாவரம் ரேடியல் சாலையில் திடீரென சூழ்ந்த கரும்புகையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி! தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், பாலத்தின் அடியில் இருந்து வந்த கரும்புகையை அணைத்தனர். இது குறித்து பல்லாவரம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.