Posts

Showing posts with the label #A | #Reg | #Dagger | #A

இரட்டை குழந்தைகளை சுமந்த கர்ப்பிணி பெண் பரிதாப பலி!! உறவினர்கள் போராட்டம்!!1092566072

Image
இரட்டை குழந்தைகளை சுமந்த கர்ப்பிணி பெண் பரிதாப பலி!! உறவினர்கள் போராட்டம்!! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியில் வசித்து வருபவர்  மதன் குமார். கூலி தொழிலாளி. திருமணமான இவருக்கு மனைவி சங்கரி (வயது 20) என்ற மனைவி இருந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சங்கரி இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுக்கப் போகிறார் என்று அவரது குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்து இருந்தது.   இந்நிலையில் சங்கரிக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் பிரசவத்திற்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் 5.20 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். துரதிருஷ்டவசமாக பிரசவத்தின் போது குழந்தைகளை பெற்றெடுப்பதற்கு முன்னதாகவே கர்ப்பிணி சங்கரி பரிதபாமாக உயிரிழந்தார். இது குறித்து செய்தி அறிந்த சங்கரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனை முன்பு குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘பிரசவத்தின் போது டாக்டர்கள் பணியில் இல்லை. எனவே அங்கிருந்த நர்சுகள் மட்டுமே பிரசவம் பார்த்துள்ளனர். இதனால் தான் நிறைமாத சங்கரி இறந்து விட்டார்’’ என்று குற்றம் சாட்டினர். இதனால் அப்பகுதியில