10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! அன்பில் மகேஷ் அதிரடி!!1806366729
10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! அன்பில் மகேஷ் அதிரடி!! தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. நடப்பாண்டில் 10,11,12 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளில் மொத்தமாக 6.79 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற அதிர்ச்சியான தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மே 5 ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கின. இதனையடுத்து 10,11 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டன. அதில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வை 2,25,534 மாணவர்களும், 11 ம் வகுப்பு தேர்வை 2,58,641 மாணவர்களும், 12 ஆம் வகுப்பு தேர்வை 1,95,292 மாணவர்களும் எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,பொதுத்தேர்வில் பங்கேற்காத 6,79,467 மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை அப்படியே விட்டு விடக் கூடாது. அவர்களை ஊக்குவிக்கும் வகையில்,தனியாக ஒரு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்ப