Posts

Showing posts with the label #Cooking | #Cylinder | #Prices

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு! கோபத்தில் இல்லத்தரசிகள்!

Image
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு! கோபத்தில் இல்லத்தரசிகள்! சென்னை: தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்து ரூ.967-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்ந்துள்ளதை தொடர்ந்து தற்போது வீட்டு உபயோகத்திற்காக சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் அல்லது மாதம் இரு முறை மாற்றி அமைப்பது வழக்கம். கடந்த 5 மாதங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் உயர்த்தப்படாத நிலையில் தற்போது ரூ.50 உயர்த்த பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.917-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்  சிலிண்டருக்கு ரூ.50 அதிகரித்து சென்னையில் வீட்டு உபயோக  சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.967-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 11 நாட்களுக்கு...