காரைக்கால் மாணவியின் தாயார் பரபரப்பு வாக்குமூலம்..!! காரைக்கால் மாணவனுக்கு குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ததாக சக மாணவியின் தாயார் சகாயராணி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான சகாயராணி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் பாலமணிகண்டன் என்ற 8ம் வகுப்பு மாணவன் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டான். வகுப்பில் முதல் மாணவனாக வந்ததை பொறுக்காத, சக மாணவியின் தாயார் சகாயராணி, காவலாளி மூலம் குளிர்பானத்தை வழங்கியது தெரியவந்தது. இதனிடையே காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாயராணிவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், காரைக்கால் மாணவனுக்கு குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ததாக சகாயராணி பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார். சகாயராணியை காரைக்கால் நகர் போலீசார் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது. பே...