பொங்கலுக்குள் சூப்பர் நியூஸ்!! ரேஷன் கடை தொடர்பான முக்கிய முடிவெடுத்த தமிழக அரசு! ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 6503 காலிப்பணியிடங்கள் பொங்கலுக்குள் நிரப்பப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டுறவுத்துறை ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், கூட்டுறவு சங்கங்களில் வரலாற்றில் முதல் முரையாக பயிர்க்கடன் அளவு ரூ.10,000 கோடியை தாண்டியாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 33,487 கடைகளில் காலியாக உள்ள 5,578 விற்பனையாளர் பணியிடங்களுக்கு 2,06,641 விண்ணப்பங்களும், 925 கட்டுநர் பணியிடங்களுக்கு 23,166 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. மொத்தம் 6,503 பணியிடங்களுக்கு 2,29,807 விண்ணப்பங்கள் வ...