Posts

சமந்தாவுக்கு வந்த வாய்ப்பை தட்டி பறித்த நடிகை அனுஷ்கா.. எந்தப் படம் தெரியுமா.?

Image
சமந்தாவுக்கு வந்த வாய்ப்பை தட்டி பறித்த நடிகை அனுஷ்கா.. எந்தப் படம் தெரியுமா.? நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு ஹிந்தி என தொடர்ந்து பல மொழிகளில் நடித்து வருவதால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது சொல்லப்போனால் தென்னிந்திய சினிமா உலகில் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக சமந்தா தான் இருக்கிறார். அந்த அளவிற்கு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேசமயம் அந்த படங்கள் ஒவ்வொன்றும் அதிரிபுதிரி ஹிட் அடிக்கின்றன. சமீபத்தில்  கூட புஷ்பா திரைப்படத்தில் அமைந்துள்ள ஓ சொல்றியா மாமா பாடலுக்கு சும்மா அஞ்சு நிமிஷம் தான் வந்து போனார். அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது மேலும் அந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இந்த பாடல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து தமிழில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அதனை தொடர்ந்து தெலுங்கில் சகுந்தலம், யசோதா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வருகின்ற.. நிலையில்  பிரபல கர்நாடக  பின்னணி பாடகி, பெங்களூரு நாகரத்தினம்மாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் நடிகை அனுஷ்கா ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த

சிம்புக்கு டாட்டா.. காட்டிவிட்டு பிரபல நடிகருடன் கைகோர்த்த ஐஸ்வர்யா ரஜினி.? வெளிவரும் குட் நியூஸ்.

Image
சிம்புக்கு டாட்டா.. காட்டிவிட்டு பிரபல நடிகருடன் கைகோர்த்த ஐஸ்வர்யா ரஜினி.? வெளிவரும் குட் நியூஸ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாக ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் அவரது மகள் ஐஸ்வர்யாவும் சினிமா உலகில் பல்வேறு படங்களை இயக்கி உள்ளார். அந்த வகையில் தனுசை வைத்து 3 என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமா உலகில் இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இந்த படத்தில் தனுஷுடன் கைகோர்த்து சிவகார்த்திகேயன் மற்றும் பலர் நடித்திருந்தனர். முதல் படமே சூப்பர்ஹிட் படமாக மாறியது அதனை தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற திரைப்படத்தை இயக்கி சுமாரான வெற்றியைப் பெற்ற நிலையில்பின் படங்களை இயக்கவில்லை. அப்படியே ஓடிக்கொண்டிருந்த ஐஸ்வர்யா திடீரென 18 வருடங்களாக தனுஷுடன் சேர்ந்து வாழ்ந்த இவர் திடீரென ஜனவரி மாதம் பிரிய போவதாக விவாகரத்து செய்தியை அறிவித்தார். இந்த பரபரப்பு செய்திகள் பல வெளிவந்த வண்ணமே இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் முசாபிர் என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கியுள்ளார். அதை தொடர்ந்து சிம்புவை வைத்து படம் இயக்குவார் என பல்வேறு தகவல்கள் வெளியாக

சம்பளம் கிடுகிடு உயர்வு… சன் டி.வி டாப் சீரியல் நடிகை ‘கயல்’ எவ்ளோ வாங்குறாங்க தெரியுமா?

Image
சம்பளம் கிடுகிடு உயர்வு… சன் டி.வி டாப் சீரியல் நடிகை ‘கயல்’ எவ்ளோ வாங்குறாங்க தெரியுமா? salary details of Sun Tv kayal serial actress chaithra Reddy Tamil News: கயல் சீரியலில் கயலாகவே வாழ்ந்து வரும் சைத்ரா இந்த சீரியலுக்காக அவர் சம்பளமாக பெறும் தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. Chaitra Reddy Tamil News:  சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களுள் ஒன்றாக “கயல்” சீரியல் உள்ளது. கடந்தாண்டு அக்டோபர் முதல் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் சில மாதங்களாகவே டிஆர்பியில் டாப் – 5 இடத்தை பிடித்து வருகிறது. மேலும், கடந்த சில வாரங்களாக முன்னணி சீரியல்களை முந்திக்கொண்டு முதலிடத்தை பிடித்து வருகிறது. இதற்கு காரணம் விறுவிறுப்பான கதையும், கயலின் இயல்பான நடிப்பும் என்றால் மிகையாகாது. கயல் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய எப்படி அனு தினமும் போராடுகிறாள் என்பதே இந்த சீரியலின் மையக்கதை. கயல் ரோலில் நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். அவரது அமைதியான காதலன் எழிலரசனாக ராஜா ராணி புகழ் சஞ்சீவ் கார்த்திக் நடிக்கிறார். நடிகை சைத்ரா ரெட்டி, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலி

ஒன்றுக்கு மேல் தேசிய விருது வாங்கிய 4 தென்னிந்திய நடிகர்கள்.. நடிப்பு அரக்கர்கள்

Image
ஒன்றுக்கு மேல் தேசிய விருது வாங்கிய 4 தென்னிந்திய நடிகர்கள்.. நடிப்பு அரக்கர்கள் சினிமாவை பொறுத்த வரை நடிகர், நடிகைகளுக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுவது விருதாக மட்டுமே இருக்க முடியும். இவ்வாறு மிக உயரிய விருதாக பார்க்கப்படுவது தேசிய விருது. இவ்விருது பல்வேறு பிரிவுகளின் கொடுக்கப்படுகிறது. அவ்வாறு சிறந்த நடிகருக்கான விருதை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாங்கிய நடிகர்களை பார்க்கலாம். கமலஹாசன் : தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களுள் ஒருவர் கமலஹாசன். இவர் தமிழ் சினிமாவிற்கு பல அற்புத படைப்புகளை தந்துள்ளார். உலகநாயகன் கமலஹாசன் 3 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் இதுவரை 230 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கமலஹாசன் நடிப்பில் வெளியான மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். மம்முட்டி : மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்முட்டி. இவர் கிட்டத்தட்ட 400 படங்களில் நடித்துள்ளார். மம்முட்டி 3 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 37 வது தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மதில்கள் மற்றும் ஒரு வடக்கன் வீரகதை என்ற இரண்

என்னுடைய படத்திற்கு சுத்தமாக செட்டாகாத நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் – மேடையில் கெத்தாக பேசிய இயக்குனர்.

Image
என்னுடைய படத்திற்கு சுத்தமாக செட்டாகாத நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் – மேடையில் கெத்தாக பேசிய இயக்குனர். தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகர் நடிகைகள் எப்படி வலம் வருகின்றனவோ அதுபோல புதுமுக இயக்குனர்களும் வலம் வந்து எடுத்தவுடனேயே டாப் நடிகர்களுக்கு கதை சொல்லியே சிறப்பான படங்களை கொடுத்து அசத்துகின்றனர். இது முன்னணி இயக்குனர்கள் பலருக்கும் தெரியாமல் போய் விடுகின்றனர். சிறப்பான கதைகளை வைத்து இருந்தாலும் சமீப காலமாக டாப் நடிகர்கள் அவர்களை அணுகுவதில்லை இதனால் பலர் பட வாய்ப்பை இழந்து இருக்கின்ற இடம் தெரியாமல் போய் விடுகின்றனர் சொல்லப்போனால் முன்னணி இயக்குனர்களுக்கான மரியாதையே தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் பல சிறப்பான படங்களை கொடுத்து அசத்தியவர் மூத்த இயக்குனர்களில் ஒருவர் பாலாஜி சக்திவேல்.இவர் இதுவரை சாமுராய், காதல், வழக்கு எண் 18/ 9 என பல படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார். ஒவ்வொரு படமும் எந்த ஒரு சாயலும் இல்லாமல் தனித்துவமாக இருந்ததால் இந்தத் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக மாறியதன் காரணமாக பாலாஜி சக்திவேல்  ஒரு இயக்கு

தொடர் சரிவில் தங்கம் விலை: இன்று ஒரே நாளில் ரூ.300க்கும் மேல் சரிவு

Image
தொடர் சரிவில் தங்கம் விலை: இன்று ஒரே நாளில் ரூ.300க்கும் மேல் சரிவு தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 31ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 312ம் குறைந்துள்ளது நகை பிரியர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4831.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 31 ரூபாய் குறைந்து ரூபாய் 4792.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 38648.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 312 குறைந்து ரூபாய் 38336.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5191.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41528.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 31ம், ஒரு சவரன் ரூபாய் 312ம் குறைந்துள்ளது என்பது க

கமல் தயாரிப்பில் ரஜினி படம்: மீண்டும் பேச்சுவார்த்தை?

Image
கமல் தயாரிப்பில் ரஜினி படம்: மீண்டும் பேச்சுவார்த்தை? கமலஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் குறித்த பேச்சுவார்த்தை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிலையில் தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் திடீரென ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்க முடியாது என பின்வாங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. இதற்கு அரசியலில் நுழைவது, உடல் நலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கமல்ஹாசன் கவுரவ வேடத்தில் நடிப்பார் என்றும் இந்த படத்தை விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது . லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் கமல்-ரஜினி இணையும் படத்தின் வாய்ப்பும் வந்துள்ளதால் இரண்டி