கூகுளில் 100 மில்லியன் முகவரிகள் முடக்கம்? - அதிர்ச்சியில் சிறு வியாபாரிகள்


கூகுளில் 100 மில்லியன் முகவரிகள் முடக்கம்? - அதிர்ச்சியில் சிறு வியாபாரிகள்


உலகில் எந்த மூலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் கூகுள் மேப் ஒன்றை கையில் வைத்திருந்தால்போதும். ஆனால், கூகுள் மேப்பில் சிலர் மோசடியாகவும், தவறான முகவரிகளையும் பதிவு செய்வதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. இதனை கவனத்தில் எடுத்துக் கொண்ட கூகுள் நிறுவனம், மோசடி முகவரிகள் பிளாக் செய்ய முடிவெடுத்தது. 

அதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 100 மில்லியன் போலி முகவரிகளை முடக்கம் செய்துள்ளது. அதில், 7 மில்லியன் புரோபைல்கள் போலியானது எனத் எதரிவித்துள்ள கூகுள் நிறுவனம், 6 லட்சத்து 30 ஆயிரம் புகார்கள் வாடிக்கையாளர்களால் நேரடியாக புகார் செய்யப்பட்டவை என தெரிவித்துள்ளது. 

12 மில்லியனுக்கும் அதிகமான மோசடி பிஸ்னஸ் முகவரிகள் உருவாக்க முயற்சிகள் நடைபெற்றதாகவும், அதில் 8 மில்லியனுக்கும் அதிகமான முயற்சிகளை முன்கூட்டியே நிறுத்திவிட்டதாகவும் கூகுள் இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் பவித்ரா கனகராஜ் கூறியுள்ளார். நாள் ஒன்றுக்கு சுமார் 20 மில்லியன் கோரிக்கைகள் பெறப்படுவதாகவும், அவை பெரும்பாலும் புதுப்பிக்கப்பட்ட வணிக நேரம், தொலைபேசி எண்கள் மற்றும் புதிய புகைப்படங்கள் ஆகியவை சார்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

கூகுள் கொள்கைகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 95 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புரைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவைதவிர தொழில்நுட்பங்களின் உதவியுடன் உள்ளடக்கக் கொள்கைகளை மீறிய 190 மில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்கள் மற்றும் 5 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்களும் தடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் கூறியுள்ளது.

Comments

Popular posts from this blog

Dinosaur Sensory Bin Idea For Hands #SensoryBin