நகை வாங்குவோருக்கு இன்று நல்ல செய்தி... தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 38,248க்கு விற்பனை!!


நகை வாங்குவோருக்கு இன்று நல்ல செய்தி... தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 38,248க்கு விற்பனை!!


சென்னை : அண்மைக்காலமாக தங்கம் விலை திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போரால் தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது. அண்மையில் போர் பதற்றம் தணிந்ததால் தங்கம் விலை லேசாக குறைந்தது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று  ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,781 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,796 ரூபாயாக இருந்தது.

அதேபோல, நேற்று 38,368 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 120 ரூபாய் குறைந்து 38,248 ரூபாய்க்கு விற்பனையாகிறது.தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 5,195 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5,180 ரூபாயாக உயர்ந்துள்ளது.அதேபோல, நேற்று 41,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 120 ரூபாய் குறைந்து 41,440 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.72.80 ஆக இருந்தது. இன்று அது ரூ.71.90 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 71,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Comments

Popular posts from this blog