இளையராஜாவுக்கு எதிரான கருத்தை தெரிவித்த யுவன்ஷங்கர் ராஜா: குடும்பத்தில் குழப்பமா?
இளையராஜாவுக்கு எதிரான கருத்தை தெரிவித்த யுவன்ஷங்கர் ராஜா: குடும்பத்தில் குழப்பமா?
சட்டமேதை அம்பேத்கரை மோடியுடன் ஒப்பீட்டு இளையராஜா கூறியிருக்கும் நிலையில் இளையராஜாவுக்கு எதிரான ஒரு கருத்தை அவரது மகன் யுவன்ஷங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இசைஞானி இளையராஜா சமீபத்தில் புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதியபோது அம்பேத்கரின் கனவுகளை பிரதமர் மோடி நனவாக்குவதாக புகழாரம் சூட்டினார். அவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு திராவிடன் என்றும் பெருமைமிகு தமிழன் என்றும் பதிவு செய்துள்ளார் .
இந்த பதிவு இளையராஜாவுக்கு மறைமுகமான தனது பதிலடியை கூறியிருப்பதாக பலர் கமெண்ட்ஸ் பகுதியில் பகுதியில் பதிவு செய்திருக்கின்றனர்.
ஏற்கனவே யுவன்சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் தற்போது இளையராஜாவுக்கு எதிரான ஒரு கருத்தை மறைமுகமாக யுவன்சங்கர்ராஜா தெரிவித்திருப்பது குடும்பத்தில் குழப்பமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
Spread the love
Comments
Post a Comment