தங்கம் விலை இன்று ஒரே நாளில் 172 ரூபாய் உயர்வு: அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!


தங்கம் விலை இன்று ஒரே நாளில் 172 ரூபாய் உயர்வு: அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!


தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 24ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 172ம் உயர்ந்துள்ளதால் நகை பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4793.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 24 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4817.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 38344.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 172 உயர்ந்து ரூபாய் 38536.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5216.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41728.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 24ம், ஒரு சவரன் ரூபாய் 172ம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை உயர்ந்தாலும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை ரூ. 66.30 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் குறைந்து ரூபாய் 65.90 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 65900.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

Dinosaur Sensory Bin Idea For Hands #SensoryBin