ஓபிஎஸ் பாஜகவில் சேருவார்.. முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆருடம்706459178
ஓபிஎஸ் பாஜகவில் சேருவார்.. முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆருடம்
ஓ.பன்னீர்செல்வம் நிச்சயமாகபாஜகவில் இணைவார் என்றுதிருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டும் என்றும் பொதுச் செயலாளராக அவர் பதவியேற்க வேண்டும் என்று அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள், நிர்வாகிகள் கூறி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் அவரது புகைப்படங்கள் கிழிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வருகிறது.
அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பாக ஓபிஎஸ் கட்சியில் இருந்து விலகவேண்டும் என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, அதிமுக கட்சி உருவாக்கப்பட்டதன் நோக்கமே திமுகவை வீழ்த்துவது தான்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு சிறப்பாக ஆட்சியை நடத்தியவர் இபிஎஸ். தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக, இபிஎஸ் பொதுச் செயலாளராக வர வேண்டும். அதுவே எங்களது விருப்பமும் தொண்டர்களின் விருப்பமுமாக உள்ளது.
திமுக அமைச்சர்களை சட்டசபை கூட்டத்தொடரில் ஓபிஎஸ் பாராட்டி பேசுகிறார். அவரும் அவரது மகனும் திமுகவோடு உறவு வைத்துள்ளனர். ஓபிஎஸ், அதிமுகவை பிளவுப்படுத்த நினைக்கிறார். கடந்த தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியதற்கு காரணமே இரட்டை தலைமைதான். விரைவில் ஓபிஎஸ் பாஜகவில் இணைவார்’ என தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரில் யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுக்கு தான் பிரதமரின் ஆதரவு ஒருக்கும் என்றும் வளர்மதி குறிப்பிட்டார்.
Comments
Post a Comment