விஜய் டி.வி சீரியல் நடிகை திடீர் வீடியோ: கணவர் மீது ஷாக் புகார்!!1161645731


விஜய் டி.வி சீரியல் நடிகை திடீர் வீடியோ: கணவர் மீது ஷாக் புகார்!!


கணவர் அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக விடியோ வெளியிட்டதால் சின்னத்திரை வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

 

சீரியல் நடிகை திவ்யா, கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் இருந்த அர்ணவையும் வீட்டுச் செலவுகளையும் தானே பார்த்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இருந்தாலும், அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

நடிகர் அர்ணவ் தரப்பில் இந்த குற்றச்சாட்டு மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அர்ணவ், ஆவடி காவல் ஆணையரகத்தில் திவ்யா மீது புகார் கொடுத்துள்ளார்.

 

அதில், தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கிறார் என்றும் மருத்துவமனையில் இருந்து அவர் இந்த விடியோவை வெளியிட்டுள்ளார் என்றும் அர்ணவ் தெரிவித்துள்ளார். மேலும், திவ்யாவை தான் தாக்கியதாகக் கூறியிருப்பது முற்றிலும் பொய். வீட்டில் தான் இல்லை என்பதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் உள்ளது. திவ்யா கருவைக் கலைப்பதற்காக நாடகம் ஆடுகிறார். தவறான நண்பர்களின் வழிகாட்டுதலால் திவ்யா புகார் கூறியுள்ளதாக அர்ணவ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

Dinosaur Sensory Bin Idea For Hands #SensoryBin