தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் மின் மானியம் பெறுபவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பற்றி விரிவாக பார்ப்போம். மின்சார மானியம்: தமிழகத்தில் முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை மானியமாக அரசு வழங்கி வருகிறது. தற்போது, இந்த மானியத்தை பெறும் பயனாளர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கிடையில், மின் மானியம் பெறுபவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவில், ஆதார் இணைப்பு சமூக நல திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதால் மின் கட்டண மானியம் பெற ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக...