தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!347365452


தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!


தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் மின் மானியம் பெறுபவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பற்றி விரிவாக பார்ப்போம்.

மின்சார மானியம்:

தமிழகத்தில் முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை மானியமாக அரசு வழங்கி வருகிறது. தற்போது, இந்த மானியத்தை பெறும் பயனாளர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கிடையில், மின் மானியம் பெறுபவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவில், ஆதார் இணைப்பு சமூக நல திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதால் மின் கட்டண மானியம் பெற ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டது. அதனால் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை எனவும் தீர்ப்பளித்துள்ளனர்.

இந்த தீர்ப்பை ரத்து செய்ய கோரி மேல்முறையீடு வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.ரவி என்பவர் தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரைணயின்போது, தமிழகத்தில் அரசின் நலத்திட்டங்கள் உரிய நபருக்கு கிடைக்கிறதா என்பதை கண்டறியவதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசின் கொள்கை முடிவு நல்லது என்றும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க தடையில்லை என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog