Posts

லக்னோ அணியை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை பலப்படுத்திக்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ்

Image
விரிவாக படிக்க >>

விக்ரம் ஆடியோ லாஞ்ச்..வெளியான சாங் லிஸ்ட்..எத்தனை பாடல்கள் தெரியுமா?

Image
விக்ரம் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் லாஞ்ச் செய்யப்படவுள்ள பாடல்களின் பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படத்தில் கமலுடன் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நரேன், காளிதாஸ் ஜெயராம் பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.  கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளத இப்படத்தின்  படபிபிடிப்பு முடிந்து ப்ரோமோஷன் வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது.  விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விரிவாக படிக்க >>

நெல்லை கல்குவாரி விபத்து...காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்!

Image
நெல்லை கல்குவாரி விபத்து...காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்! அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு, துரிதப்படுத்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு செல்ல அமைச்சர்களை அறிவுறுத்தியுள்ளார். ஸ்மார்ட் ஹோம்ஸ் - போரூர் அருகில், சென்னை @ ரூ.61 லட்சம்* முதல் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை கிராமம், அடைமிதிப்பான்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் முருகன், விஜய், செல்வம், முருகன், ராஜேந்திரன், செல்வகுமார் ஆகிய ஆறு பேர் சிக்கியுள்ளனர். அதில் இருவர் முருகன் மற்றும் விஜய் ஆகியோர் மீட்கப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவ்விபத்தில் சிக்கியுள்ள செல்வம், முருகன், செல்வகுமார் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரை மீட்கும் முயற்சியில் தீயணை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 35 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை : 51 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

Image
சென்னை: தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 22 பேர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.  கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் இன்று புதிதாக 22 ஆண்கள், 13 பெண்கள் என மொத்தம் 35 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 21 பேர் உள்பட 7 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 31 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்டவில்லை. அதேபோல் அரியலூர், தர்மபுரி உள்பட 15 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது. இந்த மாவட்டங்களில்... விரிவாக படிக்க >>

Thendral Vanthu Ennai Thodum Today Episode Promo | 14 May 2022 | Vijay Tv

Image
Thendral Vanthu Ennai Thodum Today Episode Promo | 14 May 2022 | Vijay Tv

Namma Veettu Ponnu Today Episode Promo | 14 May 2022 | Vijay Tv

Image
Namma Veettu Ponnu Today Episode Promo | 14 May 2022 | Vijay Tv

நஞ்சு ஆனது பஞ்சு

Image
நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளித்துறைதான் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. இத்தொழிலால் நேரடியாகவும், மறைமுகமாகவும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஜவுளித்தொழில் நலிவடைந்து வருகிறது. ஜிஎஸ்டி அமலாக்கம் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் ஜவுளித்துறை கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. தற்போது, பஞ்சு விலை மற்றும் அதைத்தொடர்ந்து நூல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துகொண்டே போவதால், இத்தொழிலுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 3.5 கோடி ேமல் பருத்தி நம் நாட்டில் விளைகிறது. இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ‘பருத்தி ஆண்டு’ என கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு பருத்தி ஆண்டிலும் தமிழக நூற்பாலைகள்... விரிவாக படிக்க >>